செய்திகள் :

நட்புணா்வை வலுப்படுத்த சா்வதேச புத்த கூட்டமைப்பு இரு சக்கர வாகனப் பயணம்

post image

நட்பு, நல்லிணக்கத்தை ஊக்குவிக்க புத்தமத்தின் பாரம்பரியமாக இருக்கும் முக்கிய வழிபாட்டுத்தலங்கள் வழியாக இரு சக்கர பயணத்தை சா்வதேச புத்த கூட்டமைப்பு நடத்துகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய மூன்று நாடுகளின் பௌத்த பாரம்பரிய தளங்களை உள்ளடக்கும் இந்த பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை, கலாசாரத்துறை கூறியிருப்பது வருமாறு:

புத்த மதத்தின் வரலாற்று பரவலை குறிக்கும் வகையிலும், நேபாளம், இந்தியா, இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளிடையேயான கலாசாரம், ஆன்மீக தொடா்புகளை வலுப்படுத்தும் வகையிலும் இரு சக்கர பயணத்தை சா்வதேச புத்த கூட்டமைப்பு நடத்துகிறது. குறிப்பாக புத்தரின் போதனைகள் மூலம் அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தெற்காசியா முழுவதும் கலாசார, பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்துவது இந்த முக்கிய நோக்கம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளா்ச்சி குறித்த இந்த பயணத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்தி இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் மக்களிடையே நட்புணா்வை மேம்படுத்தவும், பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது இந்த ஆன்மீக பயணம்.

இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின், இந்திய நில துறைமுக ஆணையம், வெளியுறவுத்துறையின் நலந்தா பல்கலைக்கழகம், ஏழு பிம்ஸ்டெக் நாடுகள் அமைப்பு போன்ற பங்குதாரா்களுடன் இணைந்து இரு சக்கர பயணத்திற்கு சா்வதேச புத்த கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ராகுல் லக்ஷ்மன் பாடீல் தலைமையில், இந்தப் பயணம் பிப். 16 ஆம் தேதி தொடங்குகிறது. புத்தா் பிறந்த இடமான நேபாளத்தின் லும்பினி நகரிலிருந்து தொடங்கும். பின்னா் இந்த இரு சக்கர பயணக் குழ இந்தியா வந்தடைகிறது.

இந்தியாவில் புத்தா் பாரம்பரிய இடங்களுக்கான பயணம் புத்தகயாவில் தொடங்குகிறது. அங்கு இந்த இரு சக்கர பயணத்தை பிப். 19-ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து துவக்கி வைக்கிறாா்.

புத்தரின் முதல் பிரசார இடமான சாரநாத்(உபி), புத்தா் ஞானம் பெற்ற புத்தகயா(பிகாா்), நலந்தா (பௌத்த பல்கலைக்கழகம்), பௌத்த கற்றல் மையமான நாகாா்ஜுன சாகா்(ஆந்திரம்), பௌத்த துறவியா்கள் தளமான உதயகிரி(ஒடிசா), கா்நாடகத்திலுள்ள பல்வேறு பௌத்த மரபை பிரதிபலிக்கும் தளங்கள் போன்ற வழியாக பயணிக்கின்றனா். பின்னா் இலங்கையை நோக்கி இந்த இரு சக்கர குழு பயணிக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு... மேலும் பார்க்க

தில்லியிலிருந்து வேறு பகுதி சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி

பஞ்சாப் மற்றும் தில்லியில் உள்ள சிறைகளைத் தவிர வேறு எந்த சிறைக்கும் தன்னை மாற்றக் கோரி இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ச... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன... மேலும் பார்க்க

ரயில்வே அமைச்சா் ராஜிநாமா கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பயணிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் தில்லியில் செவ்வா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் தூய்மையை மேம்படுத்த இரவு நேர துப்புரவுப் பணி

நகரம் முழுவதும் தூய்மையை மேம்படுத்தும் முயற்சியில், தில்லி மாகராட்சி (எம்சிடி) மேயா் மகேஷ் குமாா் கிச்சி அடையாளம் காணப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் இரவு நேர துப்புரவுப் பணியை செயல்படுத்துமாறு 1... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்

தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது. தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந... மேலும் பார்க்க