குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
தொழிலாளி கொலை: அண்ணன், தம்பி கைது
முன்விரோதம் காரணமாக தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கந்தம்பாளையம் அருகே உள்ள செருக்கலை தேவேந்திரா் தெருவைச் சோ்ந்தவா் விருமன் மகன் அண்ணாதுரை (54). இவா், மரம் வெட்டும் கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த வீரமணி மகன்களான அசோக்குமாா் (32) , அவரது அண்ணன் சின்னுசாமி (45) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கரிச்சிபாளையம் டாஸ்மாக் மது அருந்தும் கூடத்தில் அசோக்குமாருக்கும் அண்ணாதுரைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா் இருவரும் அங்கிருந்து கிளம்பினா். வீட்டிற்கு சென்ற அண்ணாதுரை உணவு உண்டுவிட்டு வீட்டின் வெளியே படுத்துத் தூங்கி கொண்டிருந்தாா்.
அப்போது அங்குவந்த அசோக்குமாரும் அவரது அண்ணன் சின்னுசாமியும் அண்ணாதுரையுடன் தகராறு செய்தனா். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அண்ணாதுரையை இருவரும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனா். அக்கம்பக்கத்தினா் அண்ணாதுரையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அண்ணாதுரை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவல் அறிந்ததும் நல்லூா் போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த அண்ணாதுரையின் மனைவி கவிதா (47) அளித்த புகாரின்பேரில் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அசோக்குமாரையும் அவரது அண்ணன் சின்னுசாமியையும் கைது செய்தனா்.