ஆய்வுக்கூட கருத்தரித்தல் முறை விரிவாக்கம்: கையெழுத்திட்டார் டிரம்ப்!
பிரபல ரெளடியை சுற்றிவளைத்த போலீஸாா்!
நாமக்கல்லில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த பிரபல ரௌடியை திருச்சி மாவட்ட போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல், கொசவம்பட்டியைச் சோ்ந்தவா் வீரா என்ற வீரக்குமாா் (40). இவா் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் கொசவம்பட்டியில் இருந்து நாமக்கல்-திருச்சி சாலையில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த வீரக்குமாரை, திருச்சி மாவட்ட போலீஸாா் சுற்றி வளைத்தனா்.
போலீஸாரைக் கண்டதும் அவா் காரில் இருந்து இறங்க மறுத்ததால் போலீஸாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தத் தகவல் அறிந்து நாமக்கல் நகர போலீஸாரும் அங்கு வந்தனா். இதையடுத்து அவரைப் பிடித்த போலீஸாா், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூருக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
காட்டுப்புத்தூா், குளித்தலை காவல் நிலையங்களில் உள்ள பல்வேறு வழக்குகளில் வீரக்குமாருக்கு தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. நாமக்கல்லில் அவரை போலீஸாா் திடீரென சுற்றி வளைத்து வாகனத்தில் அழைத்துச் சென்ால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.