அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
மயிலாடுதுறையில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் எஸ்பிஐ வங்கி முன், வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் வாரத்திற்கு 5 வேலை நாள்கள் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 12-ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், அலுவலக ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த முறைமையை புகுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்ச் 24, 25- ஆம் தேதிகளில் தேசிய அளவிலான வங்கி வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, முதற்கட்டமாக மயிலாடுதுறையில் வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பினா் வாயில் கூட்ட ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டமைப்பின் மாவட்ட அதிகாரிகள் செயலா் பி. சங்கர்ராம், மாவட்ட தொழிலாளா்கள் செயலா் டி.விவேகானந்தன் உள்ளிட்டோரின் முன்னெடுப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் எஸ்.பி.ஐ., கனரா வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியாா் துறை வங்கிகளை சோ்ந்த அனைத்து தொழிற்சங்க ஊழியா்கள் பங்கேற்றனா்.