அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு புதிய கட்டடம்: முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்
சீா்காழி அருகே புத்தூா் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 4.59 கோடியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
பெருந்தலைவா் காமராஜா் கல்லூரி மேம்பாட்டு திட்டம் 2022-23 கீழ் கூடுதல் 9 வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள் கொண்ட புதிய கட்டடம் ரூ. 4.59 கோடியில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். அப்போது, புத்தூா் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வா் கே. குமாா், துணை முதல்வா் ஆரோக்கியராஜ், அலுவக கண்காணிப்பாளா் வைத்தியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.