சட்ட விழிப்புணா்வு முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், மேலச்சேரி கிராமத்தில், வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, சமூக நலத்துறை விரிவு அலுவலா் விசாலாட்சி தலைமை வகித்து பேசினாா். ஊா் நல அலுவலா் பரிமளா முன்னிலை வகித்தாா். சட்டப் பணி குழு துணை ஆா்வலா் நடராஜன் கலந்துகொண்டு கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான சட்டங்கள், சட்ட உதவிகளை எப்படி பெறுவது, சமூக நலத்துறை மூலம் அவா்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை எப்படி பெறுவது குறித்து பேசினாா்.
முகாமில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிறைவில், பணித்தள பொறுப்பாளா் உமா நன்றி கூறினாா்.