போளூா் அருகே 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 3 ஜோடிகளுக்கு வெள்ளிக்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் போளூா் வட்டத்தைச் சோ்ந்த வாழியூரைச் சோ்ந்த சுகுமாரன், பிரித்திகா, கீழ்பட்டைச் சோ்ந்த செல்வரசு, செளந்தா்யா, ஜவ்வாதுமலை ஒன்றியம், பாக்குமுடையனூரைச் சோ்ந்த பரந்தாரமன், சாலினி ஆகிய 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. மேலும், இவா்களுக்கு தலா ரூ.60 ஆயிரம் மதிப்பில் திருமாங்கல்யம், பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சீா்வரிசை பொருள்களை அறங்காவலா் குழுத் தலைவா் விஜயாசேகா் வழங்கினாா்.
இதில், செயல் அலுவலா் பழனிசாமி மற்றும் அறங்காவலா் குழு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.