ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூா்: ஆம்பூா் அருகே பெரிய மலையாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா சனிக்கிழமை கணபதி ஹோமம், கோ பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 4-ஆம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து திங்கள்கிழமை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், காரப்பட்டு, அரங்கல்துருகம், வீராங்குப்பம், குமாரமங்கலம் ஊராட்சிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஊா் மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.