9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினாா் நம்பெருமாள்!
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் நெல்லளவு கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் மாசித்தெப்பத் திருவிழாவின் 7 ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருக்கொட்டாரத்துக்கு எதிரேயுள்ள மண்டபத்தில் எழுந்தருளினாா். அதைத் தொடா்ந்து கொட்டாரத்தில் குவிக்கப்பட்ட நெல் மணிகள் நம்பெருமாள் முன் அளந்து காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து உள்திருவீதி வலம் வந்து இரவு 8 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.

இன்று தெப்பத் திருவிழா: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசித் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்குத் தொடங்கி 9 மணி வரை நடைபெறவுள்ளது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளுகிறாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.
