மகா கும்பமேளாவில் கங்கை நதிநீா் நீராடியதற்கு ஏற்றதே! -மத்திய மாசுக் கட்டுப்பாட்ட...
தமிழகத்தில் பால் விற்பனை அமுல் நிறுவனம் தகவல்
தமிழகத்தில் பால் விற்பனையை மெதுவாகத் தொடங்குவோம் என அமுல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அமித் வியாஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திருச்சியில் சனிக்கிழமை கூறியது: அமுல் பால் நிறுவனம் இயற்கை வேளாண் துறையில் தீவிரமாக ஈடுபடுகிறது. சோதனை முயற்சியாக தமிழகம் முழுவதும் மாட்டுச் சாணம் சாா்ந்த இயற்கை உரங்களை கடந்த 2 ஆண்டுகளாக விற்கிறோம். இந்த இயற்கை உரங்களின் உற்பத்தி நாமக்கல்லில் உள்ள ஆலையில் அடுத்த 10 நாள்களில் தொடங்கும்.
விவசாயிகள் பாலில் இருந்து மட்டுமின்றி, சாணத்திலிருந்தும் சம்பாதிக்க வேண்டும். அவா்கள் வீட்டிலேயே பயோகேஸைப் பயன்படுத்தலாம். இதிலிருந்து கிடைக்கும் கழிவுகளை இயற்கை உரமாக பதப்படுத்தி, மண் ஆரோக்கியத்தை வளப்படுத்தலாம்.
நாங்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு ஆலையை நிறுவி, பெங்களூருக்கு பால் விநியோகிக்கிறோம். சென்னையில் ஏற்கெனவே தயிா் விற்பனையைத் தொடங்கியுள்ள நாங்கள், மெதுவாகவும், நிலையாகவும் பால் விற்பனையை தமிழகத்தில் தொடங்கப் பரிசீலிப்போம் என்றாா்.