செய்திகள் :

ஹாரி பாட்டர் புகழ் சைமன் ஃபிஷெர் பெக்கர் காலமானார்!

post image

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் சைமன் ஃபிஷெர் பெக்கர் காலமானார். அவருக்கு வயது 63.

ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன் மற்றும் டாக்டர் ஹூ ஆகிய படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று தனக்கென தனி இடத்தை உருவாக்கிய பிரிட்டிஷ் நடிகர் சைமன் ஃபிஷெர் பெக்கர். இவர் உடல்நலக்குறைவால் காலமான செய்தியை அவரது மேலாளர் ஜாஃப்ரி மேனேஜ்மென்ட்டின் கிம் பாரி உறுதிப்படுத்தினார்.

இதையும் படிக்க: மீண்டும் மறுவெளியீடாகும் இன்டர்ஸ்டெல்லர்!

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி பார்க்கும் ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன் படத்தில் ஹஃபிள்பஃப் வீட்டில் பேயான ஃபேட் ஃப்ரியராக ஃபிஷர்-பெக்கர் ரசிகர்களில் இதயங்களை வென்றிருந்தார்.

டாக்டர் ஹூ சீசன் 5 மற்றும் 6 இல் டோரியம் மால்டோவராக அவரது குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இவ்விரு படங்களைத் தவிர்த்து அவர் பப்பி லவ், ஒன் ஃபுட் இன் தி கிரேவ், தி பில், லவ் சூப் மற்றும் ஆஃப்டர் லைஃப் போன்ற பிரபலமான பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அவரது ஆஸ்கர் விருது பெற்ற லெஸ் மிசரபிள்ஸ் திரைப்படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியரா இவர்? உலக ரசிகர்களைக் கிறங்கடிக்கும் ஹனுமன்கைண்ட்!

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவருடன் அவரது மனைவி உஷ... மேலும் பார்க்க

ரயில் சிறைபிடிப்பு விவகாரம்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! 104 பயணிகள் மீட்பு!

ரயில் சிறைபிடிப்பு விவகாரத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரயிலில் இருந்த 104 பயணிகள் பத்திரமாக பாதுகாப்பு பணியாளர்களால் மீட்கப்பட்டனர். பாகிஸ்தானில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு 9 பெட... மேலும் பார்க்க

கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி

வாஷிங்டன் / டொரன்டோ: தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டோரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமி... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபா் டுடோ்த்தே கைது

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 போ் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அவசரக்கால மீட்புக் குழுவினா் கூறியதாவது: தலைநகா் ஜோஹன்னஸ்பா்கின் சா்வதேச விமான நிலையம் அருகே நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

சவூதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவாா்த்தை: ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோ / ஜெட்டா: உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னா் ரஷியா மீது உக்ரைன் இதுவர... மேலும் பார்க்க