நேபாள மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி நிறுவனர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்!
ஹே ராம் - 25 ஆண்டுகள் நிறைவு!
நடிகர் கமல் ஹாசனின் ஹே ராம் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
நடிகர் கமல் ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படமான ஹே ராம் கடந்த 2000 ஆம் ஆண்டு பிப். 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் குறித்து போதிய பார்வைகளும் விமர்சனங்களும் கிடைக்காததால் வசூல் ரீதியாக அன்று தோல்விப் படமானது. ஆனால், நுட்பமான காட்சிகள் வழியாக கமல் ஹாசன் பெரிய திரையனுவபத்தைக் கொடுத்தற்காகவே இன்றும் விமர்சகர்களால் இப்படம் பாராட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை?
காந்தியைக் கொலை செய்ய சென்ற சாகேத் ராம் என்பவர் அடையும் மன மாற்றங்களும் மத நல்லிணக்கத்தையும் திரைக்கதையில் திறமையாகக் கையாளப்பட்டிருந்தன.
இளையராஜாவின் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாடல் மற்றும் பின்னணி இசை இப்படத்தின் அழகியலுக்கு மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்தன.

சரியாக, ஹே ராம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படத்தை யூடியூப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் சேனலில் 4கே தரத்தில் இலவசமாகக் காணலாம்.