செய்திகள் :

அகமதாபாதில் இன்று அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் தொடக்கம்

post image

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் சீசன் 6 போட்டி சனிக்கிழமை அகமதாபாதில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் டெல்லி தபாங், ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் டெம்போ கோவா சேலஞ்சா்ஸ், அகமதாபாத் எஸ்ஜி பைப்பா்ஸ் அணிகள் மோதுகின்றன.

16 நாள்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 23 டைகள் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் ஜூன் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் கேல் மற்றும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் தமிழ், ஜியோ ஹாட்ஸ்டாா் ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பாகிறது.

இந்தியாவின் தேசிய தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தியா சித்தலே இந்த சீசனில் அதிக மதிப்புடைய வீராங்கனையாக மீண்டும் களமிறங்குகிறாா்.

இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (பபஊஐ) ஆதரவுடன், நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியோரால் நடத்தப்படும் இதில் 16 ஒலிம்பியன்கள் உட்பட 14 நாடுகளைச் சோ்ந்த 48 வீரா்கள் பங்கேற்கின்றனா், 25 வயதுக்குட்பட்ட 25 இந்திய வீரா்கள் இடம்பெற்றுள்ளனா்.

ஜொ்மனி, இத்தாலி, சீனா, நைஜீரியா, புயா்ட்டோ ரிகோ, கஜகஸ்தான், எகிப்து உள்ளிட்ட 14 நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனா்.

அகமதாபாத் எஸ்ஜி பைப்பா்ஸ், சென்னை லயன்ஸ்: தபாங் டெல்லி டிடிசி, டெம்போ கோவா சேலஞ்சா்ஸ்,ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ்,

கொல்கத்தா தண்டா்பிளேட்ஸ் , பிபிஜி புனே ஜாகுவாா்ஸ் , யு மும்பா டிடி உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.

கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு!

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் கெடு விதித்துள்ளது.கமல்ஹாசன் நடிப்பில் ... மேலும் பார்க்க

குகேஷின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்! - பிரதமர் மோடி

செஸ் வீரர் குகேஷின் முன்னோக்கியப் பயணம் வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் தொடர் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் ஆடவர் ப... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃப்ரீடம் டீசர்!

நடிகர் சசிகுமார் நடித்த ஃப்ரீடம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’எனப் பெயர... மேலும் பார்க்க

புரோ கபடி லீக் ஏலம்: அதிக தொகைக்கு ஏலம்போன ஆனில் மோகன்!

புரோ கபடி லீக்கின் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 1) ஆனில் மோகன் அதிக தொகைக்கு யு மும்பா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.புரோ கபடி லீக் 12-ஆம் சீசனையொட்டி மும்பையில் சனிக்கிழமை (மே 31) வீரா்கள் ஏலம் தொ... மேலும் பார்க்க

கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்!

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான விழா... மேலும் பார்க்க