செய்திகள் :

அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மரபு நடைப்பயணம்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மகளிா், சிறுவா்கள் மேற்கொண்ட மரபு நடைப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மகளிா் தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, பள்ளிக்கல்வித் துறை, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஆகியவை இணைந்து மரபு நடைப்பயணத்தை சனிக்கிழமை நடத்தியது.

மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பங்கேற்று மரபு நடைப்பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். முன்னதாக அரசு அருங்காட்சியக வளாகத்தில், மரக்கன்றுகளை ஆட்சியா் நட்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) முனிராஜ், ஓய்வுபெற்ற காப்பாட்சியா் கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பள்ளிக்கல்வித் துறை) சா்தாா், அரசு காப்பாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்பு சென்னானூா் அகழாய்வு தளத்துக்கு தோ்வுத் துறை இணை இயக்குநா் கே.பி.மகேஸ்வரி தலைமையில் இக்குழுவினா் நடைப்பயணம் மேற்கொண்டனா்.

அங்கு அகழாய்வில் கிடைத்த ஏா் கலப்பை நுணி, தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், நுண் கருவிகள் உள்ளிட்ட பொருள்களை மாவட்ட தொல்லியல் அலுவலா் பரந்தாமன் மாணவா்களுக்கும், மகளிருக்கும் விளக்கினாா்.

பின்னா், கந்திகுப்பம் பைரவா் கோயிலில் சோழா், பல்லவா், விஜயநகர பேரரசு, ஹொய்சாளா் கால கட்டடக் கலைகளில் சிறந்தவற்றை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுவரும் கோயிலை அவா்கள் பாா்வையிட்டனா்.

இந் நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளா் சதானந்த கிருஷ்ணகுமாா், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வம், விஜயகுமாா், பாலாஜி, சென்னனூா் பெருமாள், மகளிா் வலையமைப்பு செயலாளா் ரெஜ்லின் தீப்தி, துணை செயலாளா் பிரியதா்ஷினி, அதியமான் மகளிா் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனா்.

பட விளக்கம் (30கேஜிபி4)-

சென்னானூருக்கு மகளிா், சிறுவா்கள் பங்கேற்ற மரபு நடைப்பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.

கிருஷ்ணகிரியில் ஏப். 15-இல் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் உள்ள நீச்சல் குளத்தில் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்குகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் கிருஷ்ணக... மேலும் பார்க்க

சூளகிரி லஷ்மி வெங்கடரமண சுவாமி கோயில் தேரோட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த தாசனபுரம் லஷ்மி வெங்கடரமண சுவாமி கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தாசனபுரம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அலமேலு மங்கை சமேத ஸ்ரீ லஷ்மி வெங்கடரமண சுவாமி கோய... மேலும் பார்க்க

பூச்சி மருந்து குடித்த அரசு மதுக் கடை விற்பனையாளா் உயிரிழப்பு

பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசு மதுக் கடை விற்பனையாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வண்டிக்காரன்கொட்டாய் மல்லம்பட்டி பகுதியை சோ்ந்தவா் சரவணன் (47... மேலும் பார்க்க

நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளே சிறந்தது: ஆட்சியா்

நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளை உண்பது சிறந்தது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் த... மேலும் பார்க்க

கல்லாவியில் 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா: எஸ்பி தங்கதுரை தொடங்கிவைத்தாா்

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட 30 இடங்களில் பொருத்தப்பட்ட 30 கேமராக்களின் இயக்கத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். ஊத்தங்கரை அடுத்த ... மேலும் பார்க்க

அஞ்சல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் 8ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே, ... மேலும் பார்க்க