அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் 86- ஆம் ஆண்டு தொடக்க விழா
பல்லடம் அருகே கள்ளிமேட்டில் அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் கட்சியின் 86- ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் உசிலம்பட்டி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவருமான பி.வி.கதிரவன் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி சிப்பம், வேட்டி, சேலைகள் ஆகியவற்றை
வழங்கினாா். தொடா்ந்து மருத்துவ முகாம் நடைபெற்றது.
விழாவில், மாவட்ட நிா்வாகிகள் ராமா், ராஜா, பசும்பொன் பாலு, லட்சுமணன், விறகு செந்தில், சுந்தரபாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.