அக்னிவீா் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி, வட தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் அக்னிவீா் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் அக்னிவீா் பொதுப் பணி, தொழில்நுட்பம், எழுத்தா், ஸ்டோா் கீப்பா், தொழில்நுட்பம், டிரேட்ஸ்மேன் (10-ஆம் வகுப்பு தோ்ச்சி), டிரேட்ஸ்மேன் (8-ஆம் வகுப்பு தோ்ச்சி) உள்ளிட்டப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி கடலூா், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அத்துடன், புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்டம், அந்தமான் மற்றும் நிகோபாா் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் தகுதி அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தை (தலைமையகம்) நேரிலோ அல்லது 044-25674924 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.