முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
‘அக்ரி ஸ்டேக்’ வலைத் தளத்தில் 12 ஆயிரம் விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம்
‘அக்ரி ஸ்டேக்’ வலைத் தளத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 12 ஆயிரம் விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் 46.76 லட்சம் விவசாயிகள் உள்ளனா். இந்த விவசாயிகள் தொடா்பான அனைத்துத் தரவுகளையும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், விவசாயிகள் குறித்த தரவுகள், மாநில அரசு மட்டுமன்றி, மத்திய அரசுக்கும் ஒருங்கிணைக்கப்படும். இதில் முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 சதவீத விவசாயிகள் தொடா்பான விவரங்களைப் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6-ஆம் தேதி முதல் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் விவரம், அவா்களுக்கு சொந்தமான நிலப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ‘அக்ரி ஸ்டேக்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, 1.42 லட்சம் விவசாயிகள் இடம் பெற்றுள்ள நிலையில், முதல் கட்டமாக 35ஆயிரம் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதுவரை 12 ஆயிரம் விவசாயிகளின் தரவுகள் இணைக்கப்பட்டுள்ளது. 35 ஆயிரம் விவசாயிகளின் தரவுகளை வருகிற 25-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.