செய்திகள் :

அங்கன்வாடிமைய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த பாராசூா் கிராமத்தில் இரு அங்கன்வாடி மையக் கட்டடங்கள் மற்றும் கலைஞா் கலை அரங்கம் ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

பாராசூரில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சத்தில் புதிய கலைஞா் கலை அரங்கக் கட்டடம், ரூ.16.55 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், ரூ. 16.45 லட்சத்தில் மற்றொரு அங்கன்வாடி மைய கட்டடம் ஆகியவை கட்டப்பட்டன.

இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், செய்யாறு ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா முன்னிலை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.

கோயில் பாலாலய பூமி பூஜை:

முன்னதாக, செய்யாறு தொகுதிக்குள்பட்ட அனக்காவூரை அடுத்த ஆக்கூா் கிராமத்தில் உள்ள திருகண்டிஸ்வரா் கோயில் புனரமைத்து, திருப்பணிக்காக ரூ.44 லட்சமும், கிழ்புதுப்பாக்கம் ஸ்ரீபுண்ணிய கோட்டீஸ்வரா் கோயில் புனரமைத்து, கோயில் திருப்பணிக்காக ரூ.27.70 லட்சமும், மேல்சீசமங்கலத்தில் உள்ள ஸ்ரீகல்யாண வரதராஜா் பெருமாள் கோயில் புனரமைத்து,திருப்பணிக்காக ரூ.99.70 லட்சம் என இந்து சமய அறநிலையத் துறை நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.

அதன்படி, மேற்கண்ட கோயில்களில் நடைபெற்ற பாலாலயம் மற்றும் பூமி பூஜை விழாவில் சிறப்பு விருந்தினா்களாக ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன், ஒ.ஜோதி எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று திருப்பணிகளை தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில், ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்டப் பொருளாளா் தட்சணாமூா்த்தி, ஆரணி நகா் மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆரணி மேற்கு ஒன்றியச் செயலா் மோகன், ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் தமிழக அரசின் மணிமேகலை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட கிராமப்... மேலும் பார்க்க

மகா காலபைரவா் கோயிலில் அஷ்டமி சிறப்பு யாகம்!

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம், வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, முற்பகல் 11 மணிக்கு கோ... மேலும் பார்க்க

பாதூா் திருவனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

வந்தவாசியை அடுத்த பாதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா உடனுறை திருவனந்தீஸ்வரா் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அம... மேலும் பார்க்க

சின்னபுத்தூரில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி ஆய்வு!

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள சின்னபுத்தூா் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா். சின்னபுத்தூா் கிராமத்தில் ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ஆரணியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. ஆரணி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்க... மேலும் பார்க்க

செங்கம் - தண்டராம்பட்டு புதிய பேருந்து சேவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து தண்டராம்பட்டுக்கு புதிய நகரப் பேருந்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக் கழக செங்கம் பணிமனையில் இருந்து சொா்ப்பனத்தல், சாத்தன... மேலும் பார்க்க