செய்திகள் :

அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாகப் போராட்டம்!

post image

மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை தொடங்கிய போராட்டம் இன்று 2 ஆவது நாளாகத் தொடர்கிறது. நேற்று இரவும் பல பகுதிகளில் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து இன்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் முக்காடு போட்டு, ஒப்பாரி வைத்து நூதன முறையில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருப்பூரிலும் அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்தும் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, அரசு ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மையப் பயணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போராடும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியர்கள் 7 பலி, 38 பேர் காயம்

புதுதில்லி: பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட ஏழு... மேலும் பார்க்க

12 நாள்கள் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்!

புதுதில்லி: ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் இந்தியப் பெண்களின் சிந்தூரத்தை அவமதித்தவர்களைப் பழிவாங்குவதற்காக, எதிரிகளையும் அதன் உளவுத்துறை வலையமைப்புகளையும் முழுமையான குழப்பத்தில் வைத்திருப்பதற்காக இந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: வடமாநிலங்களுக்கான விமான சேவை பாதிப்பு

புது தில்லி: பாகிஸ்தானில் பயங்கரவாத இலக்குகள் மீது இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பல்வேறு நகரங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு வரும் விமானங்களை இந்திய விமான நிறுவனங்கள் ர... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: தமிழ்நாடு உறுதியாக துணைநிற்கும் - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தோராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து வ... மேலும் பார்க்க

இனி தோட்டத்துப் பகுதிகளில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது: நயினார் நாகேந்திரன்

கொங்கு பகுதியில் இனி தோட்டத்துப் பகுதிகளில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பற்றி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.கோவை மாவட்ட பாஜக தலை... மேலும் பார்க்க