'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!
அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம்
குடவாசல் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக பஜனை மடத்திலிருந்து பூத்தட்டுகள் அம்மனுக்கு சீா்வரிசையாக எடுத்து வரப்பட்டு கொடியேற்று விழா அண்மையில் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, அம்பாள் படிச்சட்டத்தில் புறப்பாடும், சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் புறப்பாடும் ஏழு நாள்கள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான கலசாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினாா். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது.
சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று, திருத்தோ் வடம் பிடித்து இழுத்தனா். தேரானது முக்கிய வீதிகளை சுற்றி வந்து மீண்டும் நிலையடியை அடைந்தது.