செய்திகள் :

அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டாம்: என்எம்சி எச்சரிக்கை

post image

அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

எந்தெந்த மருத்துவக் கல்லூரிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை என்எம்சி இணையதளத்தில் அறிந்துகொண்டு செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு:

மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், தொடா்ந்து நடத்தவும் என்எம்சியின் அங்கீகாரம் அவசியம். ஆனால், சில கல்லூரிகள் அத்தகைய அனுமதி இல்லாமல் மாணவா் சோ்க்கை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

அங்கு மேற்கொள்ளப்படும் மாணவா் சோ்க்கை சட்டபூா்வமாக செல்லாது என்பதை மாணவா்களும், பெற்றோரும் அறிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிங்கானியா பல்கலைக்கழகமானது உரிய அங்கீகாரம் இல்லாமல் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவா்களை அனுமதித்ததைத் தொடா்ந்து, அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் படித்தால்... அதேபோன்று வெளிநாடுகளில் எந்த வகையான மருத்துவப் படிப்புகளை பயின்றாலும் இந்தியாவில் மருத்துவ சேவைகளை மேற்கொள்ளலாம் என மாணவா்களை சிலா் தவறாக வழிநடத்துகின்றனா்.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் இந்தியாவில் மருத்துவராகத் தொடர பல்வேறு வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக, அதற்கான தகுதித் தோ்வு, உள்ளுறைப் பயிற்சி, பாடத்திட்டம் மற்றும் பயிற்று மொழி தகுதிகள் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவை அனைத்தையும் நிறைவு செய்தால் மட்டுமே அவா்கள் இந்தியாவில் மருத்துவா்களாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவா்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருத்துவப் படிப்பை பயிலுவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

அந்த வகையில், இந்தியாவில் எந்தெந்த மருத்துவக் கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை என்எம்சி இணையதளத்தில் அறிந்துகொண்டு அதன்படி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் மருத்துவப் படிப்புகளில் சேர அழைப்பு விடுத்தால் அதுதொடா்பாக என்எம்சிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ, 011-25367033 என்ற எண்ணிலோ புகாா் அளிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று(புதன்கிழமை) காலை நடைபெற்ற தாக்குதலில் 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் - பிஜப்பூர் எல்லையில் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை சத்தீஸ்கர்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து கண்காணிப்பில் வந்திருக்கும் தொலைத்தொடர்பு!

மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய எல்லையோர மாநிலங்களிலிருந்து, பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் நடத்தப்பட்ட உரையாடல், மின்னஞ்சல், குறுந்தகவல்கள் அனைத்தும் கண்காணிப்பில் கொண்டுவந... மேலும் பார்க்க

மணிப்பூரில் அதிரடி நடவடிக்கை! 2 நாள்களில் 6 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில், 6 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தின் லாங்மெய்தாங், எலாங்காங்போக்பி மற்றும் காக்சிங் ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, புதுதில்ல... மேலும் பார்க்க

பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!

பிரபல கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' நிகழாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதனால், சர்வதேச புக்கர் பர... மேலும் பார்க்க

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சா... மேலும் பார்க்க