2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலை...
அசாமில் ரோஹிங்கியா அகதிகள் தப்பியோட்டம்!
அசாம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகள் 3 பேர் தப்பியோடியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கான அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளில் மூன்று பேர் வியாழனன்று (ஜன. 2) சுவற்றில் ஏறி குதித்து தப்பியோடியுள்ளனர்.
நேற்று அவர்களுக்கான தினசரி பதிவேடு கணக்கெடுப்பின்போது அவர்கள் தப்பியோடியது அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்: ஓவைசி குற்றச்சாட்டு!
அங்கு தங்கியிருந்த போதி ஆலம், முஸ்தஃபா கமால், அப்துல் காதர் ஆகியோர் தப்பியோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களைத் தேடும் பணியில் அசாம் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பகுதியிலுள்ள அகதிகள் முகாம் கடந்த 2023 ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு பெரும்பாலும் ரோஹிங்கியா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.