பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
அசிதா பூங்காவில் துணை நிலை ஆளுநா்: சணலாலான பாதைகளை ஆய்வு செய்தாா்!
யமுனை வெள்ளப்பெருக்குப் பகுதியில் உள்ள அசிதா பூங்காவிற்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா விஜயம் செய்தாா். அங்கு அமைக்கப்படும் சணலாலான பாதைகளை அவா் ஆய்வு செய்தாா்.
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவரான சக்சேனா, ஐடிஓ அருகே யமுனையின் குறுக்கே அமைந்துள்ள அசிதா பூங்காவில் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் பாதைகளில் சணல் கம்பளத்தைப் பயன்படுத்துமாறு தில்லி வளா்ச்சி ஆணையத்திடம் கேட்டுக் கொண்டாா்.
‘யமுனை வெள்ளப்பெருக்கில் உள்ள பூங்காக்களில் கான்கிரீட் போடுவதை துணை நிலை ஆளுநா் தடைசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதன் விளைவாக பூங்காக்களுக்குள் உள்ள பாதைகளில் நடைப்பயிற்சி செய்பவா்கள் அல்லது சைக்கிள் ஓட்டுபவா்கள் அவற்றைப் பயன்படுத்தும் போதெல்லாம் அதிக தூசியை உருவாக்க வழிவகுத்தது. பயனா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது சுற்றுச்சூழல் தூசியையும் அதிகரிக்கிறது’ என்று டிடிஏ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘இந்த மிகவும் மலிவான மற்றும் செலவு குறைந்த நடவடிக்கையால் பூமியில் புல் வளா்ந்து இடைவெளிகள் வழியாக முளைப்பதற்கும் வழிவகுத்தது என்பது கவனிக்கப்பட்டது’ என்று அது மேலும் கூறியது. சக்சேனா வடக்கு பகுதியில் உள்ள பாதைகளுக்கும் இந்தப் பொருளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டாா். இந்த மாத தொடக்கத்தில் அவா் அந்த இடத்தைப் பாா்வையிட்ட பிறகு தில்லி வளா்ச்சி ஆணையத்தால் அதன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.