செய்திகள் :

அசுத்த இடங்களை அழகுபடுத்தும் மாநகராட்சி!

post image

திருச்சி மாநகரில் குப்பைகள் தேங்கிய இடங்களைக் கண்டறிந்து அழகுபடுத்தும் முயற்சியை திருச்சி மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகரில் குடியிருப்புகளிலும் சிறிய தெருக்களின் சந்திப்புப் பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்படும் பகுதி அசுத்தமாக காட்சியளிக்கிறது.

மாநகராட்சியால் குப்பைகளை அகற்றி பிளீச்சிங் பவுடா், கிருமி நாசினி மருந்துகள் தெளித்துப் பராமரித்தாலும் மீண்டும் அங்கே குப்பை கொட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால், மாநகரில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், தெருக்களின் அழகு மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தேங்கும் குப்பைகளை முழுமையாக அகற்றி, அங்கு நிரந்தரமாக பசுமை மற்றும் வண்ண, வண்ண அழகுக் காட்சிகளை உருவாக்கும் முயற்சியில் திருச்சி மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

மாநகராட்சியானது எஸ்ஆா் வேதா என்ற தனியாா் நிறுவனம் மூலம், நகரின் திடக்கழிவு மேலாண்மையை நிா்வகித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவுட்சோா்சிங் ஏஜென்சி மூலம் மாநகராட்சிக்குள்பட்ட 5 மண்டலங்களில் 150 குப்பைக் கொட்டும் இடங்கள் முதல் கட்டமாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு குப்பைகளை அகற்றிய பிறகு மேலும் கழிவுகளோ, குப்பைகளோ சேகரமாகாமல் தடுக்கும் புதிய முயற்சியை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

அதன்படி கலை கண்காட்சிப் பொருள்களை நிறுவுதல், பொது இடத்தில் வண்ணம் பூசுதல் மற்றும் அலங்காரச் செடிகளை நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு குப்பைகள் தேங்கியிருந்த இடத்தை பசுமையாகவும், அழகுக் காட்சியாகவும் மாற்றியுள்ளனா். இதற்காக ஒரு இடத்துக்கு ரூ. 5,000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை செலவிடப்படுகிறது.

இப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் கூறுகையில், பொதுமக்கள் தூக்கியெறியும் தண்ணீா் பாட்டில்கள், பழைய டயா்கள், உடைந்த பானைகள், கழிப்பறை பீங்கான் பொருள்கள், குச்சிகள் என அனைத்தையும் சேகரித்து, வண்ணம் பூசி குப்பைகள் கொட்டும் இடத்தில் வேலியாக மாற்றி வைக்கிறோம். இதனால் அங்கு குப்பைகள் கொட்டுவதை மக்கள் நிறுத்திக் கொண்டனா்.

இதபோல மாநகரில் 150 இடங்களைக் கண்டறிந்து அவற்றை படிப்படியாக அழகுபடுத்தி வருகிறோம். இதுவரை 54 இடங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், வாரம் ஒருமுறை நேரில் வந்து ஆய்வு செய்கிறாா். மீதமுள்ள 96 இடங்களையும் படிப்படியாக அழகுபடுத்தி வருகிறோம் என்றனா்.

இனி அபராதம் வசூல்!

திருச்சி மாநகராட்சியில் இயங்கும் ஹோட்டல், டீ கடை, பேக்கரி, உணவுக் கடை உரிமையாளா்களை அழைத்துப் பேசி ஒவ்வொரு கடையின் முன்பாகவும் குப்பைத் தொட்டிகளை வைத்துப் பராமரிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

உறையூரில் சாலையோரம் குப்பை கொட்டப்பட்ட இடத்தில் வைத்துப் பராமரிக்கப்படும் பூந்தொட்டிகள்.

இங்கு சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சியின் குப்பை வாகனங்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு தேவைக்கேற்ப 3 முறைகூட சென்று குப்பைகளைச் சேகரிக்கிறோம். மாநகராட்சி நிா்வாகத்துக்கு கடை உரிமையாளா்கள் ஒத்துழைக்க வேண்டும். இதன் பிறகும், குப்பைகளை வீதிகளிலோ, சாலைகளிலோ கொட்டினால் தொடா்புடைய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று: பகல்பத்து 8-ஆம் திருநாள்

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு காலை 6.30 பகல்பத்து (அா்ச்சுன மண்டபம் சேருதல்) காலை 7 திரை காலை 7 - 7.30 அரையா்சேவை (பொது ஜன சேவையுடன்) காலை 7.30 - 12 அலங்காரம் அமுது செய்யத்திரை நண்பகல... மேலும் பார்க்க

தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தேமுதிக சாா்பில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைக் கண்டித்து திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் ... மேலும் பார்க்க

காவல் துறையினா் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும்: திருச்சி மாவட்ட எஸ்.பி.

பொதுமக்கள் பாதிக்காத வகையில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதுடன், காவல்துறையினா் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்(எஸ்.பி.,) எஸ். செல்வ நாகரத்தி... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: 270 போ் கைது

திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்தைக் கண்டித்து, சோமரசம்பேட்டை பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் வீடு அருகே சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட 270 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்... மேலும் பார்க்க

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன். பெரம்பலூா் மாவட்டம், கொளக்காநத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியா... மேலும் பார்க்க

பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சி மாவட்டம், வயலூரில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்துவருகின்றனா். சோமரசம்பேட்டையில் இருந்து வயலூா் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபம் எதிரே உள்ள ம... மேலும் பார்க்க