செய்திகள் :

அஜித்குமார் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கிய CBI அதிகாரிகள்..

post image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த மாதம் 28 ஆம் தேதி திருட்டுப் புகாரில் தனிப்படை காவல்துறையினர் சட்டவிரோதக் காவலில் எடுத்து சித்திரவதை செய்து விசாரித்ததில் அஜித்குமார் உயிரிழந்தார்.

அஜித்குமார் கொலை வழக்கு

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் திருப்புவனம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து தனிப்படையைச் சேர்ந்த 5 காவலர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிபதியை விசாரணை அதிகாரியாக நியமித்து, அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக திருப்புவனம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று அஜித்குமார் குடும்பத்தினர், சாட்சியங்கள், காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் அஜித்குமார் கொலை வழக்கு, தமிழக அரசால் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்திற்குள் விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், விசாரணை நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷின் அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடமிருந்து பெற்று விசாரணையை தொடங்க வேண்டும் எனவும், ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மதுரை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறை தரப்பில் சிபிஐ விசாரணை அலுவலர்களுக்கான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது.

சிபிஐ அதிகாரிகள்

அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

நேற்று மதுரை வந்த சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையிலான அதிகாரிகள் மதுரை சிபிஐ அலுவலகத்தில் அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை அமர்விற்கு சென்று பதிவாளரிடமிருந்து விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டனர்.

பின்பு மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரை சந்தித்த சிபிஐ அதிகாரிகள், விசாரணைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து அஜித்குமார் கொலை வழக்கை விசாரிக்கும் பணியைத் தொடங்கினர்.

கோவை: பள்ளி மாணவனை தாக்கி, பாலியல் தொல்லை - இளைஞர் கைது!

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் 13 வயது மாணவர் வசித்து வருகிறார். அவர் அன்னூர் அருகே அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற இளைஞர் சேலத்தில் படுகொலை.. காவல் நிலையம் அருகே கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலைய... மேலும் பார்க்க

60 வயது முதியவருக்கு திருமண ஆசை காட்டி மோசடி; ரூ.15 லட்சத்தை சுருட்டிய பூசாரி-நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்ப... மேலும் பார்க்க

நிறப்பாகுபாட்டை உடைத்து உலக அழகிப் பட்டம் - ஆப்ரிக்கா வரை சென்ற புதுச்சேரி பெண்ணின் தற்கொலை பின்னணி

மாடலிங் மீதான காதலால் மருத்துவப் படிப்பை துறந்த சங்கரப்பிரியாபுதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சங்கரப்பிரியா. சிறு வயது முதல் படிப்பில் சுட்டியாக இருந்த சங்கரப் பிரியா, பல சூழல... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் பாய் பிரண்டாக பழகி, மாணவியிடம் 60 சவரன் நகையை மோசடி செய்த தோழி..

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் ஒரு ஸ்கூலில் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கல்லூரி படிப்புக்கு தயாராகி வருகிறார். அவரது தந்தை குளச்சல் பகுதியில் ஜெரா... மேலும் பார்க்க

`நடிகர் சஞ்சய் தத் நினைத்தால் மும்பை குண்டு வெடிப்பு நடந்திருக்காது' -உஜ்வல் நிகம் எம்பி சொல்வதென்ன?

1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 267 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தார். இக்குண்டு வெடிப்பை நடத்திய தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான்... மேலும் பார்க்க