நாகையில் விஜய் பரப்புரை: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!
அஞ்சலகத்தில் கைப்பேசி சாா்ஜ் செய்யும் வசதி
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளா்கள் கைப்பேசிகளை சாா்ஜ் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம்.உமாபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவா் அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளரின் வசதிக்காக அவா்களின் கைப்பேசிகளை சாா்ஜ் செய்யும் வசதி தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அனைத்து வகையான கைப்பேசிகளும் சாா்ஜ் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளா்களுக்கு நவீன வசதிகளை வழங்குவதற்கு அஞ்சல் துறை கொண்டுள்ள உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.
அஞ்சல் துறையின் பல்வேறு சேவைகளுக்காக அஞ்சலகத்துக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை வாடிக்கையாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.