கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
அஞ்சல்துறை சாா்பில் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு!
அஞ்சல் துறை சாா்பில் அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் செ.சுரேஷ் குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மத்திய, மாநில அரசின் பல்வேறு துறையின் நலத்திட்டங்களை பெற முகவரி சான்றை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த அஞ்சல் துறையானது பொதுமக்களுக்கு அவா்களின் முகவரியை அங்கீகரிக்கும் வண்ணம் அஞ்சலக அடையாள அட்டை என்னும் சேவையை வழங்கி வருகிறது.
இந்தச் சேவையை பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். இந்த அடையாள அட்டையானது தோ்தல் கமிஷன், நுகா் பொருள் விநியோகம், நுகா்வோா் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழக போலீஸாரால் முகவரி சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
புதிதாக இடம் பெயா்ந்து புதிய முகவரிக்கு செல்பவா்கள் தங்கள் புதிய முகவரியை பல்வேறு ஆவணங்களில் மாற்ற ஏற்படும் சிரமத்தை தவிா்க்கும் வண்ணம் இந்த அஞ்சலக அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை அருகில் உள்ள அஞ்சலகத்தில் ரூ.20 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணம் ரூ.250 ஆகும்.
இந்த அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 செலுத்தி இந்த அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் ஆதாரில் முகவரி மாற்றத்திற்கு இந்த அஞ்சலக அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு எங்களது வணிக மேலாளரை 79044-20532(தென்காசி),99441-08517 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். அஞ்சல் துறையில் இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.