செய்திகள் :

அடிக்கடி எமோஜி அனுப்புவது உறவுகளை மேம்படுத்தும்: ஆய்வில் புதிய தகவல்!

post image

உறவுகளை மேம்படுத்த எமோஜிக்கள் பெரிதும் உதவுவதாக சமீபத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இப்போது பெரும்பாலும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே ஒருவரையொருவர் தொடர்புகொள்கின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சாட்(Chat) செயலிகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாட் செயலிகளில் ஒருவருடன் உரையாடுவதற்கு செய்திகளை அனுப்பும்போது எழுத்துகளுடன் எமோஜி அல்லது ஸ்மைலி குறியீடுகளும் அதிகம் பயன்படுத்தப்படுத்துகின்றன. அதேபோல எழுத்துகளாக வார்த்தைகளாக அன்றி, தனியாகவும் வெறும் எமோஜிக்களும் அனுப்பப்படுகின்றன. அதன் மூலமாகவும் தங்கள் பதிலைக் கூறுகின்றனர்.

சாதாரணமாக நாம் கடினமான சில வார்த்தைகளை உபயோகித்தால்கூட அதனுடன் இந்த எமோஜிக்களைச் சேர்க்கும்போது அது லேசானதாக மாறிவிடுகிறது.

அந்தவகையில் ஒருவருடனான உரையாடலில் எமோஜிக்களை அடிக்கடி பயன்படுத்தும்போது உறவுகள் மேம்படுவதாகவும் அந்த நபருடன் உறவில் நெருக்கம் ஏற்படுவதாகவும் புதிய ஆய்வு கூறுகிறது. இது உணர்ச்சிகளின் சரியான வெளிப்பாடாக இருப்பதால் எதிர் நபரிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு பற்றிய ஆய்வாளரான யூன் ஹு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் 'பிஎல்ஓஎஸ் ஒன்' என்ற இதழில் வெளியாகியுள்ளன.

23 முதல் 67 வயதுடைய 260 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒரே மாதிரியான உரையாடல், எமோஜி இல்லாமலும் எமோஜியுடனும் காட்டப்பட்டன. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஒருவரை கற்பனை செய்துகொண்டு அந்த உரையாடலைப் படிக்க அறிவுறுத்தப்பட்டனர். இப்போது அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்று கேட்கப்பட்டது. அவர்களின் முக மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.

அவர்கள் கூறியதன்படி, எமோஜிக்கள் இருந்தால் அந்த குறுஞ்செய்திக்கு பதிலளிக்கத் தூண்டுவதாகவும் உணர்ச்சிமிக்கதாகவும் இருந்ததாகக் கூறியுள்ளனர்.

"ஒரு செய்திக்கு பதிலளிக்கத் தூண்டினாலே அவர்களிடையே உரையாடல் தொடரும். இதனால் அவருடனான உறவு மேம்படும், நெருக்கம் ஏற்படும், அந்த உறவில் திருப்தியும் கிடைக்கும்" என்று ஆய்வாளர் யூன் ஹு கூறினார்.

மேலும் முகம் போன்ற வடிவமுள்ள எமோஜிக்கள், முகம் அல்லாத வேறு எமோஜிக்கள் ஆகிய இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதாகவும் கூறுகிறார்.

முகம் போன்ற வடிவம் உள்ள எமோஜிக்கள் உரையாடல்களில் அதிகமாக நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது நெருக்கமானவர்களுடன் மேலும் உணர்வுப்பூர்வமாக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

அப்புறம் என்ன... பிடித்தவர்களுக்கு எமோஜிக்களை அனுப்புங்கள்..!

A new study has shown that emojis are a great help in improving relationships.

இதையும் படிக்க | நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறீர்களா?

சசிகுமாரின் ஃப்ரீடம் வெளியீடு ஒத்திவைப்பு! ஏன்?

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் குறித்த படமாக உருவான ஃப்ரீடம் திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்து... மேலும் பார்க்க

விம்பிள்டன் நாயகன்: ரோஜர் ஃபெடரரை முந்தி சாதனை படைத்த ஜோகோவிச்!

விம்பிள்டனில் நோவக் ஜோகோவிச் 14-ஆவது முறையாக அரையிறுதிக்குத் தேர்வாகி புதிய சாதனை படைத்துள்ளார். புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் ஜூன் 23 முதல் தொடங்கி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெற... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 7 படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தொடர்ந்து புதுப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.தமிழ் சினிமாவில் தலைமுறை இடைவெளிகளில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் என இம்மூவரும் தங்களுக்கான இடங்களைப் பிடித்தவர்கள்.... மேலும் பார்க்க

வரலாற்று நாயகன்: ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய மெஸ்ஸி!

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38) அமெரிக்காவின் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். ... மேலும் பார்க்க

கார்த்தி - 29 படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் கார்த்தியின் 29-வது படத்திற்கான பெயர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். ஆனால், வெளியீட்டில் தாமதமாக... மேலும் பார்க்க

தனுஷ் - 54 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் தனுஷ் - விக்னேஷ் ராஜா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.நடிகர் தனுஷ் இறுதியாக நடித்த குபேரா திரைப்படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தெலுங்கில் வெற்றிப் படமானது. வணிக ரீதியாக... மேலும் பார்க்க