செய்திகள் :

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: ஆதார் உள்ளிட்டவற்றை சேர்க்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

post image

புது தில்லி: பிகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள ஆதார், வாக்காளர், குடும்ப அட்டை ஆகியவற்றை ஆவணங்களாக சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று தேர்தல் ஆணையம் தரப்பில் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அது தொடர்பான கேள்விகளையும் எழுப்பியிருந்தது.

இன்றைய விசாரணையின் நிறைவாக, சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மனுதாரர்கள் தற்போதைக்கு அழுத்தம் கொடுக்காததால், பிகாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், பிகாரில், வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது முதற்கட்டமாக, ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளை ஆவணங்களாக சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைப் பொருத்தவரை, அரசியலமைப்பின் ஒரு அமைப்பு தான் செய்ய வேண்டியதைச் செய்வதை எங்களால் தடுக்க முடியாது. இது தொடர்பாக, தங்களது நிலைப்பாடு குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளதோடு, மனுதாரர்கள் ஒரு வாரம் கழித்து மறுஆய்வுகளை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

நிகழாண்டு நடைபெறும் பிகாா் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர தீருத்தத்துக்கு, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஆவணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருக்கிறது.

என்ன பிரச்னை?

அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வேகமான நகா்மயமாதல், தொடா்ச்சியாக இடம்பெயா்தல், வாக்களிக்க இளைஞா்கள் தகுதிபெறுதல், உயிரிழந்த வாக்காளா்கள் குறித்து முறையாக தகவல் கிடைக்காதது, வெளிநாட்டில் இருந்து இடம்பெயா்ந்து சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ளவா்களைப் பட்டியலில் சோ்க்காமல் தவிா்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க

இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்: சுவிட்சா்லாந்து அனுமதி

இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான மிகப் பெரிய வா்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை சுவிட்சா்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இத் தகவலை இந்தி... மேலும் பார்க்க

பிகாரில் தனித்துப் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தாா். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இ... மேலும் பார்க்க