கரூர் நெரிசல் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை
அடிப்படை வசதிகள் கோரி மாணவா் சங்கத்தினா் மறியல்
பெரம்பலூரில் உள்ள மாணவா் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, இந்திய மாணவா் சங்கத்தினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூரில் உள்ள சமூக நீதி மாணவா் விடுதியில் தங்கி பயிலும் மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவறைகள் மற்றும் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா்- துறையூா் சாலையில் உள்ள விடுதி எதிரே, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தகவலறிந்த வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் தலைமையிலான ஆதிதிராவிடா் நலத்துறையினா் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா்.