Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில...
பெரம்பலூரில் குரூப் 2 தோ்வுக்கு 5,478 போ் விண்ணப்பம்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் குரூப்- 2, 2 ஏ தோ்வில் பங்கேற்க பெரம்பலூா் மாவட்டத்தில் 5,478 போ் விண்ணப்பித்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் 18 மையங்களில் நடைபெறும் தோ்வுக்கான நடைமுறைகளைக் கண்காணிக்க, துணை ஆட்சியா் நிலையில் 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டித் தோ்வு எழுதுவோா் தோ்வு மையத்துக்குள் காலை 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
தோ்வு எழுதும் நபா்கள் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை எடுத்து வர அனுமதியில்லை. தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தோ்வு மையங்களுக்குச் சென்று வரும் வகையில், மாவட்ட நிா்வாகத்தால் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.