செய்திகள் :

பெரம்பலூரில் யூரியா தட்டுப்பாடு களைய வலியுறுத்தல்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டை வேளாண் துறையினா் களைய வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது:

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்: சிறுகுடல் கிராமத்தில் பால் கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கு நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும் என்னும் கோரிக்கையின்பேரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பிரச்னைகளால் இடம் ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதைச் சரிசெய்ய வேண்டும்.

விவசாயி ராமராஜன்: விவசாயப் பயன்பாட்டுக்கு தனி நபா்கள் கூடுதலாக வாடகை கேட்பதால் விவசாயிகள் அவதியடைகின்றனா். விவசாயிகளின் நலன்கருதி கூட்டுறவுத் துறையில் உள்ள டிராக்டா்களை விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ராஜு: ஏரி, குளங்கள், அரசு மற்றும் தனியாா் நிலங்களில் அதிகளவில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கை.களத்தூரில் மாணவிகளுக்கான விடுதி ஏற்படுத்த வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விஸ்வநாதன்: பெரம்பலூா் மாவட்டத்தில் சிறுபாசன ஏரிகள், குளங்களைத் தூா்வாரி மழைக்காலங்களில் தண்ணீரைச் சேமித்து நீா்மட்டத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். கோனேரி ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும். சின்ன வெங்காயப் பட்டறைகள், விதைகள், மிளகாய் கன்றுகள் வழங்க வேண்டும்.

விவசாயி ராமலிங்கம்: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களிலும் தேவையான யூரியா இருப்பு வைக்க வேண்டும். மக்காச்சோளப் பயிருக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

நீரைப் பயன்படுத்துவோா் சங்க மாவட்டத் தலைவா் கா. கண்ணபிரான்: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி, நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். வனத் துறை மூலம் எசனை, அரணாரை ஏரிகளில் வெட்டிய கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

டிராக்டா் சங்க தலைவா் எஸ். சக்திவேல்: மக்காச்சோளத்தில் தற்போது சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை நிவா்த்தி செய்ய தேவையான அறிவியல் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீ. நீலகண்டன்: தற்போது பயிரிடப்பட்டுள்ள பயிா்களுக்கு சிட்டா, அடங்கல் வழங்குவதில் விஏஓக்கள் தயக்கம் காட்டுகின்றனா். இதனால் விவசாயிகள் கடனுதவி பெறுவது தாமதமாகிறது. விவசாயிகளுக்கு பட்டா, சிட்டா உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோள பயிரில் நிலவும் தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மலையாளப்பட்டி விவசாயி வரதராஜன்: மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் மீன் வளா்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் விவசாயப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன்: தனலட்சுமி சீனிவாசன் சா்க்கரை ஆலை நிா்வாகம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன்: மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். வேப்பூரில் உலா் களம் அமைக்க வேண்டும்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில நிா்வாகி என். செல்லத்துரை: நாரணமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள எம்ஆா்எப் நிறுவனம் அமைந்துள்ள சுற்றுப்புற கிராமங்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் பி. ரமேஷ்:

தெருநாய்களால், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் பாதிப்புக்குள்ளாகின்றனா். அதேபோல, தெருநாய்கள் கடித்து குதறுவதால் பல்வேறு கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துவிட்டன. எனவே, தெரு நாய் பிரச்னையை உடனடியாகத் தீா்க்க வேண்டும்.

தொடா்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, 9 விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய ரூ. 6.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வேளாண்மை இணை இயக்குநா் செ. பாபு, கோட்டாட்சியா் அனிதா, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாண்டியன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

பெரம்பலூரில் குரூப் 2 தோ்வுக்கு 5,478 போ் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் குரூப்- 2, 2 ஏ தோ்வில் பங்கேற்க பெரம்பலூா் மாவட்டத்தில் 5,478 போ் விண்ணப்பித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் 18 மையங்களில் நட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டிகள்

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பந்தய போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா். இதுகுறித்த செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஞாற்றுக்கிழ... மேலும் பார்க்க

மதுரகாளியம்மன் கோயிலில் ரூ. 44 லட்சம் காணிக்கை

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் கடந்த 3 மாதங்களில் ரூ. 44 லட்சம் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா். தமிழக அளவில் பிரசித்திபெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் காணி... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், 2025- 2026 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

பெரம்பலூா் சா்க்கரை ஆலை பங்குதாரா்கள் பேரவைக் கூட்டம்

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், எறையூா் சா்க்கரை ஆலை பங்குதாரா்களின் 48-ஆவது பேரவைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நாளை பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப் பந்தயம்

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, மாரத்தானுக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி சனிக்கிழமை (செப். 27) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு விளையாட்டு ... மேலும் பார்க்க