செய்திகள் :

அடுத்தடுத்து தகர்க்கப்படும் குடியிருப்புகள்; நள்ளிரவில் அலறும் மக்கள் - என்ன நடக்கிறது பந்தலூரில்?

post image

நீலகிரி காடுகளில் வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தனியார் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தஞ்சமடைந்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள மனிதர்கள் மத்தியில் நாள்தோறும் போராடி வருகின்றன. நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் ஒன்றான கூடலூர் வனக்கோட்டத்தில் 24 மணி நேரமும் யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீடு

அதையும் மீறி எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. யானைகளிடம் இருந்தும் மனிதர்களையும் மனிதர்களிடமிருந்து யானைகளையும் பாதுகாக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் யானைகள் வீடுகளை சேதப்படுத்தி நுழைந்து உள்ளே இருக்கும் அரிசி போன்ற தானியங்களை உட்கொண்டு வருகின்றன. நள்ளிரவு நேரங்களில் வீடுகளை சேதப்படுத்தும் யானைகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து பேசும் பந்தலூர் மக்கள், " எங்கோ யாரோ செய்யும் காடழிப்பு வழித்தட ஆக்கிரமிப்பால் யானைகள் ஊருக்குள் நுழைகின்றன. பழங்குடிகள் தோட்ட தொழிலாளர்களின் குடிசைகளையும் வீடுகளையும் இடித்து உணவு பொருட்களை எடுத்துச் செல்கின்றன. குழந்தைகளையும் முதியவர்களையும் வீட்டின் கூரையில் ஏற்றி தப்பிக்க வைக்க வேண்டியிருக்கிறது. நள்ளிரவில் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீடு

கடந்த சில நாள்களில் மட்டும் பந்தலூரில் 10 - க்கும் மேற்பட்ட வீடுகளை யானைகள் சேதப்படுத்தி உணவு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளன. வீட்டுக்குள் நுழைந்த யானையிடம் இருந்து தப்பிக்க கூரையில் இருந்து விழுந்த ஒருவர் மருத்துவமனைரில் சிகிச்சை பெற்று வருகிறார். தினமும் இது தொடர்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் இருக்கிறோம் " என்றனர்.

யானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்தி உள்ளே நுழைவதற்கான காரணங்களை கண்டறிந்து அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை வனத்துறை உடனடியாக எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Antarctica: உலகின் மிகப் பெரிய பனிப்பாறை A23a நகரத் தொடங்கியது - இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

உலகின் மிகப் பெரிய மற்றும் பழைமையான பனிப்பாறைக்கு A23a என்று பெயர். நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் இருந்த இந்த பனிப்பாறை மீண்டும் நகரத் தொடங்கியிருக்கிறது.முதன்முதலாக 1980களில் உலகின் மிகப் பெரிய பனிப... மேலும் பார்க்க

எட்டிப் பார்த்த ஒற்றைக் கொம்பன்; காத்திருந்த மராபூ நாரை - காசிரங்கா தேசியப் பூங்கா | Photo Album

காசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்க... மேலும் பார்க்க

நெல்லை கனமழை: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு... நிரம்பி வழியும் மருதூர் அணைக்கட்டு! - Photo Album

நெல்லை கனமழை வெள்ளம்: நிரம்பி வழியும் தாமிரபரணி ஆறு மருதூர் அணைக்கட்டு.! மேலும் பார்க்க

தொடர் கனமழை... திறக்கப்பட்ட புழல் ஏரி.. ஸ்பாட் விசிட் | Photo Album

புழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரி மேலும் பார்க்க