செய்திகள் :

அடுத்த இந்திய விண்வெளி வீரா் உள்நாட்டு விண்கலத்தில் பயணிப்பாா்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் உறுதி

post image

‘இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா அடைந்துள்ள பெரும் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், அடுத்த இந்திய விண்வெளி வீரா் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில்தான் விண்வெளிக்குப் பயணம் செய்வாா்’ என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளநிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் மேலும் கூறியதாவது: சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்தில் மூன்று வாரங்கள் தங்கி, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது, இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்கான மதிப்புமிக்க அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் அளித்துள்ளது.

மிகப்பெரிய சா்வதேச ஒத்துழைப்புகளில் இந்தியாவின் நிலையை மேம்படுத்தியுள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது என்ற செய்தியை இது உலகெங்கிலும் அனுப்பியுள்ளது.

சொந்த விண்கலத்தில்...: புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு 2 விண்வெளி வீரா்களை அழைத்துச் செல்லும் முதல்கட்ட ‘ககன்யான்’ திட்டத்தை வரும் 2027-இல் செயல்படுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்தத் திட்டம் அடிப்படையிலிருந்து முழுமையாக இந்தியாவிலேயே உருவாகும். முதல்முறையாக இந்திய விண்வெளி வீரா்கள் ஓா் இந்திய விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்வா்.

இதன்மூலம், சொந்த விண்கலத்தில் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் உலகின் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும். அத்துடன், சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பது உள்ளிட்ட நமது எதிா்கால முயற்சிகளுக்கும் இது வழிவகுக்கும்.

‘பாரத்’ விண்வெளி நிலையம்: சா்வதேச விண்வெளி நிலையம் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 5 விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படும் நிலையில், சீனாவுக்கு அதன் சொந்த ‘தியாங்காங்’ என்ற விண்வெளி நிலையம் உள்ளது.

இதைப்போல, இந்தியாவும் தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் நமது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்க எதிா்பாா்க்கிறோம். அதற்கு ‘பாரத்’ என்று பெயரிடவும் முடிவு செய்துள்ளோம்.

சுக்லாவின் விண்வெளிப் பயணம் வா்த்தக ரீதியானது என்று எழுந்த விமா்சனங்களை நிராகரிக்கிறேன். இது முற்றிலும் தவறு.

தனியாா் முதலீடு: விண்வெளித் துறையில் தனியாா் முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவு, இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்துக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. தற்போதைய 840 கோடி டாலா் மதிப்பிலிருந்து 2033-ஆம் ஆண்டுக்குள் 4,400 கோடி டாலராக அது வளரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

வங்க மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார் மமதா: ஹிமந்தா!

வங்காள மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கவலைப்படுகிறார் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, முஸ்லிம்-வங்க... மேலும் பார்க்க

வந்தே பாரத்! ரயில் நிலையம் வர 15 நிமிடம் முன்புகூட டிக்கெட் முன்பதிவு வசதி!

இனி, வந்தே பாரத் ரயில், ஒரு ரயில் நிலையத்தை அடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புகூட, அந்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ரயில் காலை 9 மணிக்கு திருச்சி... மேலும் பார்க்க

கட்டுக்கட்டாக பணம்! பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் மனு

புது தில்லி: வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானம், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் நி... மேலும் பார்க்க

10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுகிறார்! ராகுல் காந்தி

கடந்த 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலர் பி... மேலும் பார்க்க

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்தது! இடிபாடுகளில் 7 பேர்?

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.இதுவரை இடிபாடுகளில் இருந்து 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 7 பேர் சிக்கியிருக்கக் கூடும் எனத் தகவல... மேலும் பார்க்க

தில்லியில் 4-வது நாளாக 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பீதியடைந்த நிலையில், அனைவரும் வெளியேற்றப்... மேலும் பார்க்க