அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் காலை 10 மணிவரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்கவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Chennai Meteorological Department has announced that there is a possibility of rain in 8 districts in Tamil Nadu until 10 am on Thursday.