செய்திகள் :

``அடுத்த 24 - 36 மணிநேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தலாம்..'' - பாகிஸ்தான் அமைச்சர் சொல்வதென்ன?

post image

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா, பாகிஸ்தான் இடையே உறவு மிக மோசமடைந்து வருகிறது.

இதனால், 'இன்னொரு போர் உலகில் உண்டாகிவிடுமோ?' என்று உலகமே அச்சத்தில் உள்ளது.

நேற்று, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. அதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார்
பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார்

அடுத்த 24 - 36 மணிநேரத்தில்...

"இந்தியா பாகிஸ்தான் மீது அடுத்த 24 - 36 மணிநேரத்தில் ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த உளவுத்துறை தகவல் வந்துள்ளது. இந்தியா எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு பலமான அடி திரும்பக் கொடுக்கப்படும்.

நாடு தங்களது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை தேவையான அனைத்து வழிகளிலும் பாதுகாக்கும். இந்தியா பாகிஸ்தான் மீது போரை திணிக்க முயன்றால், அதனால் ஏற்படும் பேரழிவிற்கு இந்தியா மட்டுமே பொறுப்பு.

பாகிஸ்தான் கடுமையாக...

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது என்று எந்த ஆதாரத்தையும் இந்தியா வழங்கவில்லை. ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை திட்டமிட்டுள்ளது.

நீதிபதியாகவும், நடுவராகவும், மரணதண்டனை நிறைவேற்றுபவராகவும் இருக்கும் இந்தியாவின் பழக்கத்தை பாகிஸ்தான் திட்டவட்டமாகவும் கடுமையாகவும் நிராகரிக்கிறது" என்று பேசியுள்ளார்.

Vijay : ``என் வண்டி மேல ஏறி குதிக்காதீங்க!'' - தொண்டர்களுக்கு விஜய் கட்டளை!

'கோயம்புத்தூர் பூத் கமிட்டி கூட்டம்!'கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் தவெகவின் பூத் கமிட்டி கூட்டத்தை கோயம்புத்தூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தியிருந்தார். விஜய்யை வரவேற்க விமான நிலையத்திலும், அவர் ர... மேலும் பார்க்க

Pegasus Spy: ``மத்திய அரசு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் என்ன தவறு?'' - உச்ச நீதிமன்றம்

2021-ம் ஆண்டு பெகாசஸ் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இஸ்ரேலில் இருந்து பெகசாஸ் என்னும் உளவு மென்பொருளை வாங்கியுள்ளது மத்திய பாஜக அரசு. இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீத... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸுக்கும் முடி உதிர்வுக்கும் என்ன சம்பந்தம்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எல்லோருக்கும் இன்று ஸ்ட்ரெஸ் இருக்கிறது. ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லை என்ற நிலையில்தான் பலரும் இருக்கிறோம். இந்நிலையில் முடி உதிர்வுக்கு ஸ்ட்ரெஸ்ஸை காரணமாகச் சொல்வது எந்த அளவ... மேலும் பார்க்க

Canada: மார்க் கார்னியின் பதவியேற்பு இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?

கனடா நாட்டின் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி வெற்றி பெற்று கனட அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிற... மேலும் பார்க்க

`கண் வறட்சி முதல் வன்முறை வரை.. மொபைல் போனின் நெகட்டிவ் பக்கங்கள்!' - பெற்றோர்களே கவனம்!

டெக்னாலஜி வளர்ந்துகொண்டே போகும் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளின் கையிலும் முழு நேரமும் மொபைல் போன் இருக்கிறது. பெற்றோர்களுடனும், சக குழந்தைகளுடனும் விளையாடுவதைத் தவிர்த்துவிட்டு முழு நேரமும் டிவி, மொ... மேலும் பார்க்க