”திமுக-வுக்கு 8 மாதம்தான் ஆயுள்; இப்போதாவது நீட் ரத்து ரகசியத்தை சொல்லலாமே!”- எ...
அடுத்த 3 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பகல் 1 மணிவரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.