திருப்பூர்: சாயக்கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது தாக்கிய விஷவாயு; இருவர் பலி.....
அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று (திங்கள்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இரவு 7 மணி வரை தமிழகத்தின் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்
சென்னை, வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், தென்காசி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
