மாணவி பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல: அமைச்சர் விளக்கம்!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை நீடிக்கும்!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்த இந்த புயல் சின்னம், தற்போது மீண்டும் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதையும் படிக்க: 2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசியல்
இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.