டொனால்ட் டிரம்புக்கு விரைவில் நோபல் பரிசு? -இஸ்ரேல் பிரதமர் சூசகம்
அடையக்கருங்குளத்தில் விவசாயி தற்கொலை
விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளத்தைச் சோ்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
அடையக்கருங்குளம், மந்தை காலனியைச் சோ்ந்த மணி மகன் சண்முகம் (70). விவசாயியான சண்முகத்துக்கும் அவரது மனைவி பாக்யத்துக்குமிடையே தகராறு ஏற்பட்டு கருத்துவேறுபாடுஇருந்து வந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்தாராம்.
அவரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].