செய்திகள் :

அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது ஏன்?: அமைச்சர் செந்தல்பாலாஜி விளக்கம்

post image

கோவையில் பல்வேறு புதிய திட்ட பணிகளையும் முடிவற்ற பணிகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் 80 அடி சாலையில் புதிய பொது விநியோக கடையை தொடங்கி வைத்த அவர் பொங்கல் தொகுப்பை மக்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

கோவை மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை ரூ.30 கோடியே 93 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 860 கிலோமீட்டர் சாலைகள் ரூ.415 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகளாக முடிக்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட சாலைகளை தார் சாலைகளாக மாற்ற கூடுதலாக ரூ. 200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு,ரூ.100 கோடி டெண்டர் விடவும், மீதம்

ரூ.100 கோடி மதிப்பில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கவும் தொடங்கப்பட்டுள்ளது என கூறினார்.

கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு கோவை மாநகராட்சி வரலாற்றில் மூன்றரை ஆண்டுகளில் இவ்வளவு நிதிகளில் சாலைகள் அமைத்தது இதுவே முதல் முறை எனவும் கூறினார்.

அவிநாசி மேம்பாலம் நீட்டிப்பு குறித்து பேசிய செந்தல்பாலாஜி, வணிகர்களின் கோரிக்கையை ஏற்று அவினாசி சாலை மேம்பாலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

சாலை பணிகள், மேம்பாலம் பணிகள், பாதாள சாக்கடை பணிகள், தெரு விளக்குகள் அமைப்பது என முழுமையாக பணிகளை செய்து வருகிறோம் எனவும் எதிர்க்கட்சி பேரவை உறுப்பினர் என்று பார்க்காமல் நிறைவேற்றி வருகிறோம்.

இதையும் படிக்க | 2024 - மோடி முதல் அம்பேத்கர் வரை பேசுபொருளான சர்ச்சைகள் ஒரு பார்வை!

அரசு நிகழ்ச்சியில் பாஜக பேரைவ உறுப்பினர் கோரிக்கை வைப்பதற்கு முன்பே, முதல்வர் அந்த திட்டங்களை அறிவித்து நிதியை ஒதுக்கினார். கோவை மாவட்டத்தின் மீது முதல்வர் சிறப்பு கவனம் செலுத்து வருகிறார் என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் திட்ட அறிவிப்புகளாக பார்க்காமல், பணிகள் தொடர்பாக முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,

ஈரோடு வந்தபோது விமான நிலையத்திலேயே மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரை அழைத்து பணிகள் தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தி பணிகளை விரைவுபடுத்தி உள்ளார் எனவும் கூறினார்.

மேலும் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சாட்டையால் தனக்கு தானே அடித்துக் கொண்டது குறித்து செய்தியாளர்களின் கேள்வி, இன்று ஞாயிற்றுக்கிழமை வேலை இருக்கா இல்லையா என நகைப்புடன் பதில் அளித்துவிட்டு புறப்பட்டார்.

உ.பி: நேபாளத்துக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் கைது!

இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசத்தின் பஹ்ராய்ச் மாவட்டத்தில் இந்தியாவிலிருந்து நேபாள நாட்டிற்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக நேற்று (... மேலும் பார்க்க

காதலியை கவர சிங்கத்தின் கூண்டுக்குள் சென்ற காதலன் பலி! விடியோ வைரல்!

மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் காதலியை கவர சிங்கத்தின் குகைக்குள் சென்ற நபரை அதனுள் இருந்த சிங்கங்கள் தாக்கியதில் பலியாகியுள்ளார்.உஸ்பெகிஸ்தான் நாட்டின் தஷ்கெண்ட் மாகாணத்திலுள்ள பார்கெண்ட் நகரில் த... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஒருவர் கைது!

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் பழங்குடியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சியோனி மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வய... மேலும் பார்க்க

5 நாள்களாக சிங்கங்களுக்கு மத்தியில் உயிர்வாழ்ந்த சிறுவன்!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் சிங்கங்கள் மற்றும் யானைகள் சூழ்ந்த விளையாட்டுப் பூங்காவில் 5 நாள்களாக சிக்கியிருந்த சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளான்.வடக்கு ஜிம்பாப்வே பகுதியிலுள்ள தனது வ... மேலும் பார்க்க

காதலிக்க நேரமில்லை: புதிய பாடல் அறிவிப்பு!

காதலிக்க நேரமில்லை படத்தின் புதிய பாடல் வெளியீடு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மே... மேலும் பார்க்க

அகத்தியா பட டீசர்!

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியா படத்தின்டீசர் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு அகத்த... மேலும் பார்க்க