சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற இரு தலைமை ஆசிரியா்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வியாழக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
திருச்சியில் கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழாவில், புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் யோ. ஜெயராஜ், மாந்தான்குடி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆா். சரவணன் ஆகியோருக்கு அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது.
தலா ரூ. 10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவற்றை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா்.
இந்நிலையில் விருது பெற்ற இருவரையும் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வியாழக்கிழமை பாராட்டினாா்.
அப்போது, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலா் செந்தில், முதன்மைக்கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் வெள்ளைச்சாமி, மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மெ.சி. சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா் கி. வேலுச்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.