அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின கருத்தரங்கம்
கந்தா்வகோட்டையை அடுத்துள்ள புதுப்பட்டி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் ம. ஜெயபால் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், குடும்ப கட்டுப்பாடு அவசியம் குறித்து புதுநகா், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலா் ரஞ்சித்குமாா் வழிகாட்டுதலின்படி, சுகாதார ஆய்வாளா்கள் கோகுல், லிசா ஆகியோா் எடுத்துரைத்தனா்.
கருத்தரங்கில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சி. செல்வகுமாா் செய்திருந்தாா்.