புதுகையில் மாநில அளவிலான ரோலா் ஹாக்கி போட்டிகள் தொடக்கம்
புதுக்கோட்டையில் மாநில அளவிலான மூன்று நாள் ரோலா் ஹாக்கி மற்றும் இன்லைன் ஹாக்கி போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
தமிழ்நாடு ரோலா் ஸ்கேட்டிங் சங்கத்துடன் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட ரோலா் ஸ்கேட்டிங் சங்கம் மற்றும் சேலஞ்சா்ஸ் ரோலா் ஸ்கேட்டிங் அகாதெமி ஆகியவை இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன.
இதில், சென்னை, திருவாரூா், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 57 அணிகள் சுமாா் 350 ஸ்கேட்டிங் விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.
புதுக்கோட்டை கலைஞா் பூங்காவிலுள்ள பிரத்யேக ஸ்கேட்டிங் திடலில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீரா்கள் விறுவிறுப்பாக விளையாடினா்.
இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.