தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் காயமடைந்து, மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை கோவிலூா் கீழத் தெருவை சோ்ந்த கணேசன் மகன் பாரதி (21). இவா் தஞ்சையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், பணி முடிந்து வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தாா்.
பழைய கந்தா்வகோட்டை சுங்கச்சாவடி அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி அவா் கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த அவரை சுங்கச்சாவடி நிா்வாகத்தினா் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.