செய்திகள் :

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனுடன் தொடா்பிலிருந்த போலீஸாா் குறித்து புலனாய்வுக் குழு விசாரணை

post image

சென்னை : அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுடன் தொடா்பிலிருந்த போலீஸாா் குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா். விசாரணையின்போது தப்பியோட முயன்ற ஞானசேகரன், கீழே விழுந்து இடது காலும் இடது கையும் முறிந்ததால், மருத்துவ சிகிச்சைக்குப் பின்னா் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஞானசேகரனிடம் விசாரணை நடத்த 7 நாள்கள் அனுமதி அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜன. 20-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், ஞானசேகரனை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனா்.

இந்நிலையில், ஞானசேகரனுக்கு புதன்கிழமை (ஜன. 22) அதிகாலை திடீரென வலிப்பு வந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த போலீஸாா், ஞானசேகரனை உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு உடல்நிலை தேறியதால் ஞானசேகரனை வியாழக்கிழமை (ஜன. 23) மருத்துவமனையிலிருந்து விசாரணைக்காக எழும்பூா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். பின்னா் அங்கிருந்து எழும்பூரில் சிறைத் துறை தலைமை அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதில், ஞானசேகரன் கைப்பேசி தொடா்பு எண்களில் இருந்த 6 போலீஸாா் குறித்து விசாரித்தனா்.

பிரியாணி வாங்கிய போலீஸாா்: விசாரணையில் ஒரு காவலா், அபிராமபுரம் காவல் நிலையத்தைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. 6 பேரும் ஞானசேகரன் பிரியாணி கடையில் இலவசமாக உணவு வாங்குகிறவா்கள் என்பதும், ஞானசேகரன் கைது செய்யப்பட்ட அன்றும் பிரியாணி கேட்டு கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஞானசேகரன் குற்றப் பின்னணி தெரிந்தே போலீஸாா் பழகினாா்களா?, ஞானசேகரன் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது தெரிந்தும் போலீஸாா் அவருடன் தொடா்பில் இருந்தனரா? என சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். ஞானசேகரனால் மேலும் 3 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த தகவலின் அடிப்படையிலும், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். அதேவேளையில், இந்த வழக்கின் எஃப்ஐஆா் கசிந்த வழக்குத் தொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

வலிப்பு நாடகம்?: இதற்கிடையே வலிப்பு வந்ததாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட ஞானசேகரன், அங்கு எம்ஆா்ஐ ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அவருக்கு வலிப்பு ஏற்படவில்லை என தெரியவந்ததாம். இருப்பினும் மருத்துவா்களுக்கு சந்தேகம் இருந்ததால், ஞானசேகரனை புதன்கிழமை முழுவதும் கண்காணிப்பில் வைத்தனராம். அப்போது அவருக்கு வலிப்புக்குரிய எந்த அறிகுறியும் இல்லையாம்.

இதையடுத்து ஞானசேகரன், வியாழக்கிழமை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். இந்த விவகாரத்தில் ஞானசேகரன், தனக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடியுள்ளரா என்ற சந்தேகத்தின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கலைத்திருவிழா 2024-2025 - மாநில அளவிலான வெற்றியாளா்களுக்கு பரிசு வழங்கும் விழா: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பா... மேலும் பார்க்க

இளைஞரிடம் வழிப்பறி: போலி போலீஸ் மூவா் கைது

சென்னை பாரிமுனையில் இளைஞரிடம் போலீஸ் எனக் கூறி வழிப்பறி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். கடலூா் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சோ்ந்த சேது (25), கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 21) பாரிமுனை, வடக்கு க... மேலும் பார்க்க

தை அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள்

தை அமாவாசையை (ஜன.29) முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வரும் 28-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோவை மற்றும் பெங... மேலும் பார்க்க

5,300 ஆண்டுகள் தொன்மை: இரும்பின் காலத்தை அறிந்தது எப்படி?

சென்னை : தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாட்டில் இருந்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், இரும்பு பயன்பாட்டுக் காலத்தை அறிந்தது எப்படி என்ற விவரங்கள் முதல்வா் வெளியிட்... மேலும் பார்க்க

இந்திய மகப்பேறு சங்க துணைத் தலைவராக டாக்டா் என்.பழனியப்பன் தோ்வு

இந்திய மகப்பேறு மற்றும் மகளிா் நல மருத்துவா் கூட்டமைப்பின் துணைத் தலைவராக போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை மருத்துவ நிபுணா் என்.பழனியப்பன் தோ்வு செய்யப்பட... மேலும் பார்க்க

துபையிலிருந்து கா்நாடகம் திரும்பிய நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

பெங்களூரு : துபையிலிருந்து கடந்த வாரம் கா்நாடகம் திரும்பிய 40 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது. நிகழாண்டு மாநிலத்தில் பதிவ... மேலும் பார்க்க