செய்திகள் :

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: மே 28-ல் தீர்ப்பு

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் மே 28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில் ஞானசேகரனுக்கு திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த வழக்குகளிலும் ஞானசேகரனை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஞானசேகரனின் கூட்டாளிகள் சென்னை ஆலந்தூரைச் சோ்ந்த குணால் சேட், பொள்ளாச்சியைச் சேர்ந்த முரளிதரன் ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதற்கிடையே, இளம்பெண் ஒருவர், ஞானசேகரன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி-இல் புகார் அளித்தார். அதன்பேரில் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் புகாா் உண்மைதான் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், ஞானசேகரன் மீது புதிதாக மேலும் ஒரு பாலியல் வழக்கை பதிவு செய்தனர்.

ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மொத்தமாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், 5 வழக்குகளில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 9 வழக்குகளில் ஞானசேகரனை நீதிமன்றம் விடுவித்துள்ளது. மற்ற வழக்குகளில் காவல் துறை விசாரணையை முடித்து இறுதி விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சிறப்புப் புலனாய்வு அமைப்பால் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சோ்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட 13 சாட்சிகளிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிராக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் மே 28 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம்.

இதையும் படிக்க: பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!

அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

தோட்டாக்களுடன் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுக நகர மன்ற உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது!

அரக்கோணம்: தோட்டாக்களுடன் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் நகரமன்ற உறுப்பினர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள் ம... மேலும் பார்க்க

பேராவூரணியில் லாரி - பைக் மோதிய விபத்தில் 2 பேர் பலி!

பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே சந்தைக்கு பொருள்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் லாரியில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடு அருகே உள... மேலும் பார்க்க

நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் எச்சரிக்கை

நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் கடந்த 24 மணி நேரத்த... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல: விஜய்

முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத... மேலும் பார்க்க