செய்திகள் :

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: `காவல்துறை மீது சந்தேகம்...' - கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

post image
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில், குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததும், அவர்களின் விபரங்களை வெளியிடாமல் இருப்பதும் காவல்துறை மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் சமூக விரோதிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவர், மன உளைச்சலுக்கும், வலிகளுக்கும் துயரத்துக்கும் உள்ளான சூழலிலும் தைரியமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்

அவர் அளித்த புகார் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையாக (FIR) இணையத்தில் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி, செல்போன் எண் என அனைத்து விபரங்களும் தெரியும் வண்ணம் காவல்துறை வெளியிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்ற வழிகாட்டல் முறைகளும், விசாகா குழுவின் சிபாரிசுகளும் உள்ள சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விபரத்தையும் பொதுவெளியில் வெளியிட்டது ஏன்? காவல்துறையினரின் இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

பாதிக்கப்பட்ட பெண்ணும், அவர்களை சார்ந்தவர்களும் சொல்லொணா துயரத்தை வலியை சுமந்து கொண்டிருக்கும் இச்சூழலில், பாதிக்கப்பட்டவர்களோடு சட்ட ரீதியாக, மனிதநேயத்தோடு நின்று நீதிக்காக செயலாற்ற வேண்டிய காவல்துறை அரசு நிர்வாக அமைப்புகள் அதற்கு எதிர்திசையில் செயல்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே, மாணவியின் எப்.ஐ.ஆரை வெளியிட்ட பெருநகர சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட இதற்குக் காரணமான அனைவரும் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

மேலும், இவ்வழக்கில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததும், அவர்களின் விபரங்களை வெளியிடாமல் இருப்பதும் காவல்துறை மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது." என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/VaigainathiNaagarigam

Manmohan Singh : `வரலாறு உங்களிடம் மிகக் கனிவாக இருக்கும்' - சென்று வாருங்கள் மன்மோகன் சிங்

நவீன இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பிமன்மோகன் சிங்... இவர் அரசியல்வாதி அல்ல. ஆனால், இரண்டு முறைப் பிரதமராக இந்தியாவை வழி நடத்தியிருக்கிறார். தேர்தல் அரசியல் களத்தில் நின்று அவர் பதவிகளைத் தேடிப் போனதில... மேலும் பார்க்க

Manmohan Singh: கரடு முரடான பாதையை சீராக்கி, தொழில்துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் மன்மோகன் சிங்

ஜூன், 1991.இந்தியாவின் கஜானாவில் வெறும் 1 பில்லியன் டாலருக்கும் கீழே தான் அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது. அது என்ன வெறும் 1 பில்லியன் டாலர் என்று நினைக்காதீர்கள். கடந்த நவம்பர் மாத தரவுகளின் படி, ... மேலும் பார்க்க

Manmohan Singh: 6 வழிகளில் மீட்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் - மன்மோகன் சிங்கின் `1991’ ஃப்ளாஷ்பேக்

மன்மோகன் சிங்இந்திய பொருளாதாரத்தின் சிற்பிஇந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமரும், இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பி என்று அழைக்கப்படுபவருமான டாக்டர் மன்மோகன் சிங் தனது 92-வது வயதில் நேற்று காலமானார். மென... மேலும் பார்க்க

`ஞானசேகரன் மீது 20 வழக்குகள்; FIR லீக் ஆனது எப்படி?' - அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கமிஷனர் விளக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி... மேலும் பார்க்க

`அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தமிழக டிஜிபி-க்கு 3 உத்தரவுகள்' - தாமாக முன்வந்த தேசிய மகளிர் ஆணையம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், பாதிக்கப்பட்ட மாணவியால் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய... மேலும் பார்க்க