ICC U19: `என்னுடைய அப்பா எடுத்த அந்த முடிவுதான் நான் இங்கே நிற்க காரணம்' -தமிழக...
அண்ணா பல்கலை., விவகாரம்: "பத்திரிகையாளர்களின் போன்கள் பறிமுதல் செய்ய அவசியம் என்ன?"- இபிஎஸ் கேள்வி
சமீபத்தில் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி சம்பவங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரை இந்த விவகாரத்தைத் தீவிரமாகப் பேசிவந்தனர். இந்த வழக்கில் நேர்மையான விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், இந்த வழக்குச் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. பத்திரிகையாளர்கள் போன்களைப் பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் என்ன? FIR லீக் ஆனது முழுக்க அரசின் தவறு. அதனைப் பத்திரிகையாளர்கள் பக்கம் திசைதிருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது.
உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால், ஸ்டாலின் மாடல் அரசு இவ்வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ எனச் சந்தேகம் எழுகிறது. 'யார் அந்த சார்' என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற, முறையான CBI விசாரணையே நீதியை வெளிக்கொணரும்! 'யார் அந்த சார்' என்று கண்டறிய இந்த வழக்கை உடனடியாக CBI-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs