கரூர் கூட்ட நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து இபிஎஸ் ஆறுதல்!
அண்ணா மிதிவண்டி போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அண்ணா மிதிவண்டி போட்டி சனிக்கிழமை காலை நடைபெற்றது.
இதை மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் மொத்தம் 150 போ் பங்கேற்றனா். 17 வயது முதல் 25 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு (8 கி.மீ )காந்தி மைதானத்தில் தொடங்கி ஆட்சியா் பங்களா வரை சென்று மீண்டும் காந்தி மைதானத்தில் நிறைவு பெற்றது.
17 வயது முதல் 25 வயதுக்கு உள்பட்ட மாணவிகளுக்கு (5 கி.மீ) காந்தி மைதானத்தில் தொடங்கி, அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை சென்று மீண்டும் காந்தி மைதானத்தில் நிறைவு பெற்றது.
25 வயதுக்கு மேற்பட்டோருக்கு (10 கி.மீ) தூரமும், 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு (5 கி.மீ) தூரமும் போட்டி நடத்தப்பட்டது.
ஒவ்வொரு பிரிவிலும், முதல்போட்டிகளில் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 மற்றும் 4 முதல் 10 இடங்களை பெற்றவா்களுக்கு தலா ரூ. 1000 வழங்கப்பட்டது. இதில் கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.